எங்களை பற்றி

அன்புடையீர் வணக்கம் !

கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் தமிழகம் முழுவதும் வருடம் 2018 பிப்ரவரி 16 ம்தேதி அரசு (21/2018) அங்கீகாரத்தை பெற்று செயல்பட்டுவருகிறது.

கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் அரசியல்சார்பற்ற சமூகமாற்றத்திற்காக, சமூகவிழிப்புணர்வுக்காக, மாணவர்கள் மற்றும் குழந்தைகள், வளரும் இளம்தலை முறை விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட சமூக அமைப்பாகும்.

தமிழ்மொழி அறிஞர்களைக்கொண்டு மூன்றாம் தமிழ்ச்சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை. தலைமை இடமாக கொண்டு தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. கலாம் அவர்களின் கனவை ஏற்றுசெயல்பட கூடிய சிந்திக்கக்கூடிய சமூக ஆர்வலர்களை கொண்டு ஒருநாள்நிசசயம் விடியும் அது உங்களால் மட்டுமே முடியும் என நம்பிக்கையுடன் கலாம் அய்யா அவர்களின் கனவை நிறைவேற்ற இணைத்துள்ளோம்.

ஐயா கலாம் அவர்களின் கனவை மாணவர்கள், சமூக ஆர்வலர்களைக்கொண்டு உருவாக்க முடியும் என்று ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாகும். சில சேவைகள் இயக்கமாக மட்டுமே செய்ய முடியும். அப்படிப்பட்ட சேவைகளை முன்னெடுத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர்களைக்கொண்டு சிறப்பாக செயல்படுத்திவருகிறது.

கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் பணம், பதவி, இதுபோன்ற எந்தவித அடையாளமும் இல்லாமல் சாதாரணமான சமூக ஆர்வலர், இளையோர், மாணவர்கள், பெண்கள் என்று கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் அடித்தளமாக இருந்து வழிநடத்தி செயல்பட்டுக்கொன்டுவருகின்றோம்…

ஒரு குடும்பமாக அனைவரும் நட்பு என்ற போர்வைக்குள் இருந்து கொண்டு சேவையை முன்னெடுத்து நடத்துகின்றோம்.
கிராமசபைகூட்டங்கள், வழி முறைகள் பற்றிய விழிப்புணர்வுகள் கிராமத்துமக்களுக்கு கற்பித்து அதன் மூலம் சமூக மாற்றத்தை முன்னெடுத்துவருகிறோம். மாவட்டங்கள் தோறும் கிராமங்களில் மரக்கன்றுவங்கிகள், இரத்ததானவங்கிகள், மாலை நேர கல்வி மையங்கள், போன்ற செயல்பாடுகளை செய்து இலக்கை நோக்கி ஒடிக்கொன்டு இருக்கிறோம்.

கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கத்தில் மாணவர்களும், தன்னார்வலர்களும், சமூகநலஆர்வலர்களும், சகோதரசகோதரிககளும் இணைந்து தமிழக மக்களை, மாணவர்களை முன்னேற்றவேண்டும் என்பதே குறிக்கோள்.

அரசியல்சார்பற்ற ஒரு இயக்கம் எவ்வாறு செயல்பட முடியும் என்ற கேள்விபலருக்கு உண்டு. கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் ஓட்டு அரசியல் செய்வது கிடையாது. விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. எனவே கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் சமூக நல ஆர்வலர்கலும் , சகோதரசகோதரிககளும் இணைந்து தமிழக மக்களை இனிவரும் காலங்களில் போராட்டம் என்பது இல்லாமல் நாம் நமது உரிமையை எப்படிபெற முடியும் என்பதை வலியுறுத்துகிறது. கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.

சமூகசேவை என்பது சமூகத்தில் நடக்கக்கூடிய அனைத்து சேவைகளையும் உள்ளடக்கியதாகும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இளையோரையும், சகோதர, சகோதரிகளாக ஒன்றினைந்து கலாம் மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம், கலாம் ஐயாவின் கனவான விஷன் 2020 இந்தியா வல்லரசு.