இளைஞர்களின் எழுச்சி, பாரதத்தின் வளர்ச்சி
இளைஞர்களின் எழுச்சி, பாரதத்தின் வளர்ச்சி
அன்புடையீர் வணக்கம் !
கலாம்மாணவர்கள் விழிப்புணர்வு இயக்கம் தமிழகம் முழுவதும் வருடம் 2018 பிப்ரவரி 16 ம்தேதி அரசு (21/2018) அங்கீகாரத்தை பெற்று செயல்பட்டுவருகிறது.
1. இயற்கை விவசாயம் மற்றும் விவசாய வளர்ச்சிக்காக மாணவர்களுக்கும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
2. நீர் நிலைகளை பாதுகாத்தல் மற்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
3. சுற்றுச்சூழலை மேன்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
4. சுகாதாரத்தை மேன்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
5. மாணவர்களின் அறிவுத்திறனை மேன்படுத்துதல்
6. கல்வித்தரம் மேன்பாடு மற்றும் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் மக்களின் அடிப்படை தேவைகளை,
உரிமைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துதல்
7. இரத்ததானம் மற்றும் கண்தானம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
8. உடல் உறுப்புதானம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
9. ஆதரவற்றோர் மீட்பு, மாற்றுத்திறனாளிகளுக்கான பிற்கால வாழ்க்கை விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
10. சிறைக்கைதிகளுக்கான பிற்கால வாழ்க்கைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
11. தனிமனிதனின் மாற்றத்தை ஏற்படுத்துதல்
12. ஆதரவற்ற (மற்றும்) ஏழ்மையான மகளிர்களுக்கு சுய தொழில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாழ்க்கைக்கு வழிவகை செய்தல்
13. பாலினத்தின் மூன்றாம் இனமான திருநங்கைகளின் பிற்கால வாழ்க்கைக்கு வழிவகை செய்தல்
இளம் திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கவித்து பின் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற செய்வது.
உலகெங்கிலும் தினசரி அடிப்படையில் இரத்த தானம் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் உள்ள 250 க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் தேவை அறிந்து பல உயிர்களை காப்பாற்றி உள்ளோம்.
எங்கள் இயக்கத்தின் சார்பாக மரம் நடும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 32 மாவட்டங்களிலும் விழாக்காலங்கள் மற்றும் விசேஷ நிகழ்வுகள் அனைத்திலும் இலவசமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி கொண்டிருக்கிறோம். மேலும் கண்மாய் மற்றும் ஆற்றோரங்களில் தொடர்ச்சியாக பனை விதைகளை நடுகின்றோம்.
இஸ்ரோ (ESRO) அமைப்பின் 2018ஆம் ஆண்டின் சிறந்த சமூக சேவை செய்யும் அமைப்பு என்ற விருது வழங்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டையில் நடைபெற்ற தொலைநோக்கு 2020 என்ற நிகழ்வில் சிறந்த சமூக சேவகர்களுக்கான விருதுகளை இயக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் பெற்றனர் என்பதனை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
To learn more about make donate charity with us visit our "Contact us" site. By calling +44(0) 800 883 8450 .